search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி கமிஷனர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூயம் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
    • ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா இன்று மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர்.

    தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரும்போது மாநகராட்சி கமிஷனர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    தற்போது உள்ள கமிஷனர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால் கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம்.

    தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும்.

    சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள தி.மு.க அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும். தற்போது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான மனுவில் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கையெழுத்தும் இருக்கலாம்.

    சந்திப்பு பஸ் நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சரக்கு முனையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. ரூ.2.85 கோடி மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,தச்சை மாதவன், மாவட்ட இளைஞர் பாசறை முத்துப்பாண்டி, சம்சு சுல்தான் உள்பட பலர் இருந்தனர். 

    • தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
    • கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளனர்.

    மேயர் சரவணனுக்கும், பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

    மேலும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இரு தரப்பினரிடமும் பேசி மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த வலியுறுத்தினார்.

    கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் நேற்று மாநகராட்சி கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை வழங்கினர். ஆனால் அதனை வாங்க கமிஷனர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் கடிதத்தை வாங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதால் அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு கமிஷனர் ஒப்புகை சீட்டு வழங்கினார்.

    இத்தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவ் கூறும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக விரைவில் மாமன்ற கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன.
    • சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகர பொறியாளர் வெங்கடேஷ், துணை கமிஷனர் சுல்தானா, நகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். மண்டல உதவி கமிஷனர்கள், பொறியியல் மற்றும் சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் முறையாக மாநகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தான் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    உரிய அனுமதி பெற்ற அனுபவமிக்க ஊழியர்கள் மட்டுமே அந்த வாகனங்களை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டி நடை முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    • நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 மாநகராட்சி சார்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.
    • எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை உள்ளடக்கியதாக நெல்லை மாநகராட்சி உள்ளது. இங்கு வசிப்போர், இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை தாமிர பரணி நதிக்கரையோரங்களில் செய்து வந்தனர்.

    இதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்கும் வகையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியின் போது அப்போதைய தச்சை மண்டல சேர்மன் சுப்பிர மணியன் முயற்சியில் மாநகராட்சி சார்பில் எரி வாயு தகனமேடை அமைக்கப்பட்டது. அங்கு காத்திருப்போர் கூடம், பூங்கா உள்ளிட்டவை தாமிர பரணி நதிக்கரையோரம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பலன் அடைந்து வருகின்றனர். அதனை ஒப்பந்த அடிப் படையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் பராமரித்து வந்தனர்.

    அங்கு இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் குறைந்தது 5 முதல் 7 உடல்கள் வரை இங்கு எறியூட்டப்பட்டு வருகிறது.

    பராமரிப்பு மோசம்

    இங்குள்ள அதிநவீன எந்திரங்களில் 2000 பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கி சுமார் 1 மணி நேரத்தில் சடலங்களை எரித்து வந்தனர். இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையில் சடலங் களை எரியூட்டுவதற்கு ரூ.2000 மட்டுமல்லாமல், கூடுதலாக வும் ரூ.2 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுவதாக இறந்த வர்களின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நேற்று கூட ஒரு சடலத்தை எரிப்பதற்கு கூடு தலாக பணம் கேட்டதாக கூறி அங்கே இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தியான மண்டபம் போல் செயல்பட்ட இந்த எரிவாயு தகன மேடையில் பூங்காக்கள் சிதிலமடைந்து உள்ளது. அங்கு காம்பவுண்டு சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படுவதால் அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனருக்கு மாநகர பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூய்மை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • வசதிகளை முறையாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் இன்று மண்டலம் 1, 15 வேலம்பாளையம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வார்டு எண் 12, 15வேலம்பாளையம் பகுதியில் உள்ள சொர்ணபுரி அவன்யூவில் தூய்மை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிலை மற்றும் பயன்பாடுகள் குறித்தும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சேவைகளை வழங்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை முறையாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகள், கட்டட பணிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்ட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

    தொடர்ந்து இன்று மண்டலம் 4க்கு உட்பட்ட வார்டு 50, தென்னம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், வார்டு 21 குமரன் பூங்கா மற்றும் வார்டு 43 ஆலங்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் இரவு தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வார்டு 27 குமார் நகர் மற்றும் வார்டு 1 அங்கேரிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டார். 

    • முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன் விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார்.
    • கோவை டவுன் ஹாலில் ஆய்வின் போது பேசினார்

    கோவை, ஜூன்.5-

    கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றவர் பிரதாப். இவர் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் ஹால் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது நடை பாதையில் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்த்தார். பின்னர் அவரிடம் சென்று நலம் விசாரித்தார். அவரிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன் விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் டவுன் ஹால் மற்றும் ராஜா வீதி ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த படுகிறதா என்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் மக்களிடம் முதல் -அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகி றார்கள். பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    ×